Ads Top

அரச விதிமுறைகளை மீறி மன்னருக்கு முத்தம் கொடுத்த மெலனியா டிரம்ப்!


 பிரித்தானிய அரச குடும்பம் 900 ஆண்டுகள் பழமையான, உலகின் மிக மூத்த மற்றும் மதிப்பிற்குரிய அரச பரம்பரையாகத் திகழ்கிறது. தங்களின் பாரம்பரியத்தைப் பல நூற்றாண்டுகளாகப் பாதுகாத்து வரும் இவர்களுக்கு என்று மிகவும் கடுமையான நெறிமுறைகள் உள்ளன. பிரித்தானிய மன்னரைச் சந்திக்க வரும் உலகத் தலைவர்கள் அனைவரும் இந்த விதிகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பது மரபு. உதாரணமாக, உலகில் பாஸ்போர்ட் (Passport) இல்லாமலேயே எந்த நாட்டுக்கும் பயணம் செய்யக்கூடிய ஒரே நபர் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மட்டுமே. அந்த அளவுக்குப் பிரித்தானிய அரச குடும்பத்தை உலக நாடுகள் மதிக்கின்றன.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மன்னர் சார்லஸும், ராணி கமீலாவும் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டனர். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர்கள், இறுதியாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டனர். அப்போது சில முக்கிய அரச விதிமுறைகள் மீறப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னர் சார்லஸிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் ஏற்கனவே வெள்ளை மாளிகைக்குத் தெளிவான கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.

இருப்பினும், அதிபர் டிரம்ப் அந்த விதிகளைச் சற்றே அலட்சியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, விருந்து முடிந்து மன்னர் சார்லஸ் புறப்படும்போது, யாரும் எதிர்பாராத விதமாக அதிபரின் மனைவி மெலனியா டிரம்ப், மன்னரை அரவணைத்து (Hug) முத்தம் கொடுத்துள்ளார். ஒரு மன்னரைப் பொது வெளியில் கட்டிப்பிடிப்பதோ அல்லது முத்தம் கொடுப்பதோ அரச நெறிமுறைகளின்படி அனுமதிக்கப்படாத ஒரு விஷயமாகும். பொதுவாக, மன்னரைச் சந்திக்கும் பெண்கள் மரியாதையின் நிமித்தமாகச் சற்றே குனிந்து (Curtsy) வரவேற்பதே மரபு.

விதிமுறைகளை மீறி மெலனியா டிரம்ப் இவ்வாறு நடந்துகொண்டது மன்னரை அவமதிக்கும் செயல் எனப் பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆனால், அதிபர் டிரம்போ இதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படாமல், மன்னர் சார்லஸை ஒரு "சிறந்த மன்னர்" (Greatest King) எனப் புகழ்ந்து பேசி நிலைமையைச் சமாளித்துவிட்டார். அமெரிக்காவில் யார் அதிபராகப் பொறுப்பேற்றாலும், அடுத்த 50 நாட்களுக்குள் பிரித்தானியா சென்று அங்குள்ள மன்னரை அல்லது ராணியைச் சந்தித்து மரியாதை செலுத்த வேண்டும் என்பது பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வரும் ஒரு முக்கியமான பாரம்பரியமாகும்.

No comments:

Powered by Blogger.